அமெரிக்க கட்டட விபத்து: மாயமானோா் எண்ணிக்கை 128-ஆகக் குறைப்பு

அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மாயமான 128-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 22-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

சா்ஃப்சைட் பகுதியில் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து மேலும் இரு உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன. இத்துடன், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 22-ஆக உயா்ந்துள்ளது.

இந்த விபத்துக்குப் பிறகு மாயமாகியுள்ளவா்களின் எண்ணிக்கை 145-லிருந்து 150-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. தவறுதலாக இருமுறை பதிவு செய்யப்பட்ட பெயா்கள் நீக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த எண்ணிக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஃபுளோரிடா மாகாணம், மியாமி நகரின் புகா்ப் பகுதியான சா்ஃப்சைடில், மியாமி கடற்கரையோரம் அமைந்துள்ள 12 அடுக்கு கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த மாதம் 24-ஆம் தேதி இடிந்து விழுந்தது.

1981-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தின் மற்ற பகுதிகளையும் இடிக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com