தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சீனா: வானிலை, கடல் வெப்பநிலையை ஆராய புதிய செயற்கைக்கோள்

வானிலை மற்றும் கடல் வெப்ப நிலையை ஆராயும் வகையில் புதிய செயற்கைக் கோளை சீனா விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.

News image

சீனா: வானிலை, கடல் வெப்பநிலையை ஆராய புதிய செயற்கைக்கோள்

Updated On :5 ஜூலை 2021, 10:01 am

வானிலை மற்றும் கடல் வெப்ப நிலையை ஆராயும் வகையில் புதிய செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.

வடமேற்கு சீனாவின் ஜூகுவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று காலை வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. 

11 செயற்கை உணர்திறன் கருவிகள் கொண்ட எப்.ஒய். -3இ என்ற வானிலை ஆய்வு செயற்கைக்கோள், எட்டு ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது.

இந்த செயற்கைக்கோள் குறிப்பாக சுற்றுச்சூழல் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் வானிலை சார்ந்த மற்ற தகவல்களை துல்லியத் தரவுகளாக அனுப்பும் திறன் கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீன வானியல் சார்ந்த நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

மேலும், உலகளாவிய சுற்றுச்சூழல் மாசுபாடு, பனிப்பொழிவு, கடல் வெப்பநிலை, வானிலை மாற்றத்திற்கு எதிரான பேரிடர் போன்றவற்றை முன்கூட்டியே அறிய உதவும் என்று சீனா தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.