நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வங்கதேசம்: 10 லட்சத்தைக் கடந்த பாதிப்பு

வங்கதேசத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது. மேலும், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கையும் 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

News image
Updated On :10 ஜூலை 2021, 10:54 pm

DIN

வங்கதேசத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது. மேலும், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கையும் 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 11,324 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,00,543-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 212 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 16,004-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சனிக்கிழமை நிலவரப்படி, வங்கதேசத்தில் 8,62,384 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 1,22,155 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 1,182 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.