6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சீனாவில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 17 பேர் பலி

சீனாவில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 17 பேர் பலி

News image
சீனாவில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 17 பேர் பலி
Updated On :14 ஜூலை 2021, 6:59 am

DIN

சாங்காய்: கிழக்குச் சீன பகுதியில் சேர்ந்த சுஹாவ் நகரில் அமைந்திருக்கும் தங்கும் விடுதி நேற்று ( செவ்வாய்கிழமை ) மாலை திடீரென இடிந்து விழுந்தது. அறையில் தங்கியிருந்தவர்கள் , உணவு  அருந்திக்கொண்டிருந்தவர்கள் என 23 பேர் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டனர்.

பின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மேற்கொண்ட பணிகள்  தற்போது  முடிவடைந்த நிலையில் இதுவரை 17 பேர் வரை உயிரிழந்ததாகவும் , 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கட்டடம் எந்தக் காரணத்தால் இடிந்து விழுந்தது என விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.