அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பாகிஸ்தான் - குண்டு வெடிப்பில் சிக்கி பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் பலி

பலுசிஸ்தான் மாகாணத்தில் சக்தி  வாய்ந்த குண்டு வெடித்தலில் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்

News image
பாகிஸ்தான் - குண்டு வெடிப்பில் சிக்கி பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் பலி
Updated On :15 ஜூலை 2021, 10:44 am

DIN

இஸ்லாமாபாத் : பலுசிஸ்தான் மாகாணத்தில் சக்தி  வாய்ந்த குண்டு வெடித்தலில் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.இதற்கு முன் கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு பாதுகாப்பு படை வீரர்களும் அதிகாரி ஒருவரும் குண்டு வெடிப்பில் பலியாகியிருந்த நிலையில் தற்போது இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  சமீப காலமாக பாதுகாப்பு படையினரின் மேல் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.


இதுகுறித்து ராணுவத்தின்   தரப்பில்  அளிக்கப்பட்ட தகவலின் படி ' குற்றவாளிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டையை தொடர்ந்திருப்பதாகவும் ,விரோத செயல்களை மேற்கொள்ளும்  புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இது போல் கோழைத்தனமான தாக்குதல்கள்களில் ஈடுபடுபவர்களால் பலுசிஸ்தானின் அமைதியையும் செழிப்பையும் கெடுக்க முடியாது ' எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   

முன்னதாக ஜூன் 25 அன்று துணை ராணுவத்தைச் சேர்ந்த படைவீரர்கள்  5 பேர்  தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.