போதை பழக்கத்தைக் கட்டுப்படுத்தத் திணறும் அமெரிக்கா: ஒரே ஆண்டில் 93 ஆயிரம் பேர் பலி
அமெரிக்காவில் அதிகரித்துவரும் போதை பழக்கத்தால் கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் 93,000 பேர் பலியாகி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


அமெரிக்காவில் அதிகரித்துவரும் போதை பழக்கத்தால் கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் 93,000 பேர் பலியாகி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் போதை பொருள் நுகர்வு என்பது மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் போதைப் பொருள் பயன்பாடு பொதுமுடக்க காலத்தில் அதிகரித்து வந்துள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் போதைப் பொருள் பயன்பாடு 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
போதை மருந்துகள், போதை ஊசிகள் போன்ற சட்டவிரோத போதைப் பொருள் பயன்பாடுகள் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் 93 ஆயிரத்து 331 பேர் பலியானதாக அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
இதுகடந்த 2019ஆம் ஆண்டில் 72,151ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. aதீத போதைப் பொருள் பயன்பாடு காரணமாக வெர்மோண்டில் 57 சதவிகிதமும், கென்டக்கி பகுதியில் 54 சதவிகிதமும், தெர்கு கரோலினாவில் 52 சதவிகிதமும், கலிப்போர்னியாவில் 46 சதவிகிதமும் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...