ஆப்கானிஸ்தான் : வான்வழித் தாக்குதலில் 35 தலிபான்கள் பலி
ஆப்கன் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 35 தலிபான்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.


காபூல் : ஹெல்மாண்ட் மற்றும் பாதக்சன் பகுதிகளில் ஆப்கன் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 35 தலிபான்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
தொடர்ந்து ஆப்கன் அரசிற்கு நெருக்கடியைக் கொடுத்து வரும் தலிபான்களை அழிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) தலிபான்கள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்த ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான்கள் கொல்லப்பட்டதோடு அவர்களிடமிருந்த சக்திவாய்ந்த வெடிமருந்துகள் , ஆயுதங்கள் மற்றும் பதுங்கு குழிகளையும் அழித்தனர்.
கடந்த சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் கால்தர் மற்றும் சமதால் பகுதிகளில் 81 தலிபான்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...