பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் அதிக வீரியமிக்க கரோனா 

முதல் முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்டு, டெல்டா என்று பெயரிடப்பட்ட அதிக வீரியமிக்க கரோனா தொற்று, பிரிட்டனில் அதிகம் பரவி வருவதாக பிரிட்டனின் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் அதிக வீரியமிக்க கரோனா 

Updated On :4 ஜூன் 2021, 9:30 am


லண்டன்: முதல் முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்டு, டெல்டா என்று பெயரிடப்பட்ட அதிக வீரியமிக்க கரோனா தொற்று, பிரிட்டனில் அதிகம் பரவி வருவதாக பிரிட்டனின் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா என்று பெயரிடப்பட்ட அதிக வீரியமிக்க கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், கரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் எண்ணக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமையுடன் முடிந்த ஒரு வார காலத்தில் ஒட்டுமொத்தமாக 12,431 பேருக்கு கரோனா பாதித்த நிலையில், அவர்களில் 5,472 பேருக்கு டெல்டா வகை கரோனா பரவியிருப்பது ஆய்வில் தெரிய வந்திருப்பதாக அந்நாட்டு பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் கென்ட் மாகாணத்தில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட ஆல்ஃபா வகை கரோனாவை விடவும் தற்போது டெல்டா வகை கரோனா அதிகம் பரவி வருவது கண்டறியப்பட்டதால், அதன் தாக்கத்தை எதிர்கொள்ள அனைத்து வகையான நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.