ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இலங்கையில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி

இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 7 பேரைக் காணவில்லை.

News image

இலங்கையில் வெள்ளம், நிலச்சரவில் சிக்கி 4 பேர் பலி; 7 பேர் மாயம்

Updated On :5 ஜூன் 2021, 9:55 am


கொழும்பு: இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 7 பேரைக் காணவில்லை.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 5 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தியப் பெருங்கடலை ஒட்டியிருக்கும் இலங்கையின் 6 மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டு, வீடுகள், வேளாண் நிலங்கள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி இருவரும், நிலச்சரிவில் இருவரும் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.