பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் மோதல்: 30 பேர் பலி
பாகிஸ்தானில் இரண்டு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் பலியானார்கள்.


பாகிஸ்தானில் இரண்டு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் பலியானார்கள்.
தெற்கு பாகிஸ்தானின் கோட்கி பகுதியில் சையது விரைவு ரயிலும் மில்லத் விரைவு ரயிலும் இன்று காலை நேருக்கு நேர் மோதின. இந்த சம்பவத்தில் 30 பேர் பலியானார்கள். 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் 14 ரயில் பெட்டிகளும் தடம்புரண்டன. விபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடைத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...