பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 4,25,540 ஆனது
பிரேசிலில் கரோனா நோய்த் தொற்று கட்டுக்கடங்காமல் தினசரி பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 4,25,540 ஆனது

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 4,25,540 ஆனது
பிரேசிலில் கரோனா நோய்த் தொற்று கட்டுக்கடங்காமல் தினசரி பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இன்றைய பாதிப்பு நிலவரத்தை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது அதில்,
கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 2,311 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4,25,540 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒரேநாளில் 72,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் 15,28,2,705 பேர் இதுவரை நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இறப்பு எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது இடத்தை பிரேசில் பிடித்துள்ளது. நோய்த் தொற்றுகளின் புதிய அலையை எதிர்கொண்டு வருகிறது. இதன் விளைவாக பாதிப்பும், இறப்புகளும் அதிகரித்துள்ளன. நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகள் தத்தளித்து வருகின்றன.
இதற்கிடையில் தொடர்ந்து கரோனா தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...