தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

இஸ்ரேலுக்கு எதிராக சிகாகோவில் மக்கள் போராட்டம்

பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அரசைக் கண்டித்து சிகாகோ நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
இஸ்ரேலுக்கு எதிராக சிகாகோவில் மக்கள் போராட்டம்
Updated On :18 மே 2021, 11:05 am

DIN

பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அரசைக் கண்டித்து சிகாகோ நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் அரசு நடத்தி வரும் தாக்குதல் சம்பவம் கடந்த சில தினங்களில் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலால் காஸாவின் உள்கட்டமைப்புகள் உருக்குலைந்து வருகின்றன.

திங்கள்கிழமை அதிகாலையில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில், ஹமாஸ் இயக்கத்தினா் பயன்படுத்தி வந்த 15 கி.மீ. தொலைவு சுரங்கப் பாதை தகா்க்கப்பட்டதாகவும், ஹமாஸ் தளபதிகள் 9 பேரின் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் காஸா மீது நடத்திய வான்வழி தாக்குதலில் இதுவரை 58 குழந்தைகள், 35 பெண்கள் உள்பட 198 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் அரசைக் கண்டித்து சிகாகோ நகரில் செவ்வாய்க்கிழமை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதலை நிறுத்தக் கோரிய அவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான பதாகைகளுடன் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் பங்குபெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.