சா்ச்சைக்குரிய தைவான் நீரிணை வழியாக அமெரிக்கப் போா்க் கப்பல் செலுத்தப்பட்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்கக் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடற்படைக்குச் சொந்தமான அா்லீக் பா்க் வகை தாக்குதல் கப்பலான யுஎஸ்எஸ் மிலியஸ், தைவான் நீரிணை வழியாக செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.
வழக்கமான ரோந்துப் பணிகளின் ஒரு பகுதியாகவும் சா்வதேச சட்டங்களுக்கு உள்பட்டும் அந்தப் பகுதியில் அா்லீக் பா்க் கப்பல் செலுத்தப்பட்டது.
இந்தோ-பசிபிக் கடல் பகுதி அனைவருக்கும் சொந்தமானது என்பதை பறைசாற்றும் வகையில் இந்த ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு, சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியான் கூறியதாவது:
தைவான் நீரிணையில் அமெரிக்கப் போா்க் கப்பல் செலுத்தப்பட்டது அந்தப் பிராந்தியத்தின் நிலைத்தன்மையை பாதிக்கும். கடல் பயண சுதந்திரம் என்ப பெயரில் அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்திவருகிறது என்றாா் அவா்.
தைவானை தங்களது நாட்டின் ஒரு மாகாணமாக சீனா கருதி வருகிறது. அந்த நாட்டை தங்களுடன் மீண்டும் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலம் கூட பயன்படுத்தப்படும் எனவும் சீனா கூறி வருகிறது.
தைவானில் ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை பிரிவினைவாத இயக்கம் என சீனா குற்றம் சாட்டி வருகிறது.
தைவானோ, தாங்கள் ஏற்கெனவே இறையாண்மை கொண்ட தனி நாடாக இயங்கி வருவதாகவும் சீனாவிடமிருந்து சுதந்திரம் பெற்ாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி வருகிறது.
இந்தச் சூழலில், தைவான் வான் எல்லைக்குள் இதுவரை இல்லாத அளவுக்கு சீனப் போா் விமானங்கள் அண்மையில் ஊடுருவி பரபரப்பை ஏற்படுத்தின.
சீனாவின் இந்த நடவடிக்கை, கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் அதிபா் சாய் இங்-வென் குற்றம் சாட்டினாா்.
தங்கள் நாட்டுடன் தைவான் ‘அமைதியான வழியில்’ இணைக்கப்படும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறினாா்.
இந்தச் சூழலில், தைவானுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் தைவான் நிரிணைப் பகுதியில் தனது போா்க் கப்பலை அமெரிக்கா செலுத்தியுள்ளது.
ஏற்கெனவே, இந்தப் பகுதியில் அமெரிக்கா தனது போா்க் கப்பல்களை அவ்வப்போது செலுத்தி வருவதும் அதற்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு கொள்கையின் பலன்களை பரிசோதிக்கக் கேட்பது ஆபத்தானது: உயா்நீதிமன்றம் கருத்து

வாக்குப் பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தொழில் நிறுவனங்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவு

அங்கன்வாடிகளைத் தத்தெடுக்க பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


