ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உலகளவில் 330 கோடி மக்களுக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 330 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

News image
உலகளவில் 330 கோடி மக்களுக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
Updated On :24 நவம்பர் 2021, 5:54 am

DIN

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 330 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுக்க  கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொற்றைக் கட்டுப்படுத்து நோக்குடன் கொவாக்ஸின் , கோவிஷீல்ட் , ஸ்புட்னிக் , போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இரண்டு தவணையாக வழங்கப்படும் இந்த தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இதுவரை 330 கோடி பேர் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 42.2சதவீதம் என தினசரி கரோனா அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. 

மேலும் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 4.7 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 7.88லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.48 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.9 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் நேற்று(நவ-23) நிலவரப்படி 774 கோடி தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதிக அளவு தடுப்பூசி செலுத்திய நாடுகள் :

சீனா - 241.9 கோடி 

இந்தியா - 118.45 கோடி

ஐரோப்பா ஒன்றியம் - 73 கோடி

அமெரிக்கா - 42.28 கோடி 

பிரேசில் - 24.07 கோடி 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.