ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

உலகம் முழுவதும் 622 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டு வந்தாலும் தொற்றின் தீவிரம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது .

News image
உலகம் முழுவதும் 622 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
Updated On :1 அக்டோபர் 2021, 7:09 am

DIN

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டு வந்தாலும் தொற்றின் தீவிரம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது .

உலகம் முழுக்க இதுவரை   கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23.37 கோடியாக உயர்ந்துள்ளது. பல்வேறு தொற்று கட்டுப்பாடு நெறிமுறைகள் மற்றும் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின்பும் இதன் தீவிரம் குறையவில்லை.

உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 4.45 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 6.98 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.37 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.71 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்று(செப்-30) நிலவரப்படி 622.2 கோடி தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளதாக தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதிக அளவு தடுப்பூசி செலுத்திய நாடுகள் :

சீனா - 222.9 கோடி

இந்தியா - 88.15 கோடி

ஐரோப்பா ஒன்றியம் -67 கோடி

அமெரிக்கா - 47.6 கோடி 

பிரேசில் - 21.07 கோடி 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.