ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அமெரிக்கா: கரோனாவால் ஒரே நாளில் 2,100 பேர் பலி

அமெரிக்காவில் கரோனாவால் ஒரே நாளில் 2,100 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

News image
அமெரிக்கா: கரோனாவால் ஒரே நாளில் 2,100 பேர் பலி
Updated On :1 அக்டோபர் 2021, 11:42 am

DIN

அமெரிக்காவில் கரோனாவால் ஒரே நாளில் 2,100 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

உலகளவில் கரோனாவால் பெரிய பாதிப்பை சந்தித்து வரும் அமெரிக்காவில் தொற்றின் தீவிரத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று நிலவரப்படி(செப்-30) கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றின் காரணமாக 2,100 பலியானதைத் தொடர்ந்து இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 6.98 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 4.45 கோடியாக பதிவாகியிருக்கிறது.

அமெரிக்காவில் தடுப்பூசிகளுக்கு எதிரான குரல்கள் ஒலித்து வந்தாலும் இதுவரை 39.14 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன . இவற்றில் இரண்டு தவணை தடுப்பூசியை 14.6 கோடி பேர் எடுத்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.