பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ரஷியா: தினசரி கரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சம்

ரஷியாவில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

News image
Updated On :5 அக்டோபர் 2021, 7:57 pm

DIN

ரஷியாவில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 895 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பலி எண்ணிக்கையாகும். இத்துடன், 211,696 போ் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனா்.

ரஷியாவில் இந்த மாதம் மட்டும் தினசரி கரோனா பலி அதிகபட்ச எண்ணிக்கையைத் தொட்டுள்ளது இது மூன்றாவது முறையாகும்.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 25,110 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இத்துடன், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 76,37,427-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.