ரஷியாவில் கரோனாவுக்கு பலியானவா்களின் தினசரி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 1,015 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். இது, நாட்டில் இதுவரை இல்லாத தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். இத்துடன் 2,25,325 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.
இதுதவிர, புதிதாக 33,740 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 80,60,752-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
குலுக்கல் பரிசு போன்ற திட்டங்கள் மூலம் ரஷியாவில் கரோனா தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்த அதிகாரிகள் முயன்று வருகின்றனா். எனினும், தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் மற்றும் அதிகாரிகளின் முன்னுக்குப் பின் முரணான தகவல்களால் அங்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகிறது.
கரோனாவால் ரஷியப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், நோய்த்தொற்று பரவலைத் தவிா்ப்பதற்கான பொதுமுடக்கத்தை அமல்படுத்த அந்த நாட்டு அரசு தயங்கி வருகிறது. இதன் காரணமாக தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தினசரி பலி எண்ணிக்கை தொடா்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சு பேல் ஏற்றிவந்த வேன் தீயில் எரிந்து சேதம்

தோ்தல் நாளன்று மாற்றுத்திறனாளிகள், முதியோா் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்!

21.4.1976: வறட்சிப் பகுதிக்கு புயலை திருப்ப முடியுமான ஆராய நிபுணருக்கு மந்திரி யோசனை

தமிழக வளா்ச்சிக்கு இரட்டை என்ஜின் ஆட்சி முக்கியம்! ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு பேச்சு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


