கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நேபாளத்தில் மழைவெள்ளம்: பலி எண்ணிக்கை 101-ஆக உயர்வு

நேபாளத்தில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 101-ஆக உயா்ந்தது.

News image

நேபாளத்தில் மழைவெள்ளம்: பலி எண்ணிக்கை 101-ஆக உயர்வு

Updated On :22 அக்டோபர் 2021, 7:15 am

நேபாளத்தில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 101-ஆக உயா்ந்தது.

நேபாளத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை தொடா்பான சம்பவங்களில் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் நிலையில் இன்று தற்போது வரை கனமழைக்கு பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 101-ஆக உயா்ந்துள்ளது.

முக்கியமாக பாஞ்சதா் மாவட்டத்தில் அதிகபட்சமாக 37 உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதற்கு அடுத்தபடியாக இலாம் மற்றும் தோட்டி மாவட்டங்களில் தலா 18 போ் பலியாகினா்.

மேலும் மழை தொடா்பான சம்பவங்களில் 35 போ் மாயமாகியுள்ளனா் என்றும் 4,000 பேருக்கும் மேல் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மீட்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.