பெரு: கரோனாவால் 2 லட்சம் பேர் பலி
பெருவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 2 லட்சம் பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


பெருவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 2 லட்சம் பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பெருவில் இதுவரை 2 லட்சம் பேர் தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள்.
நேற்று (அக்-21) நிலவரப்படி புதிதாக 950 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 21.9 லட்சமாக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழந்ததால் இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 2,00,012 ஆகவும் பதிவாகியிருக்கிறது.
மேலும் அந்நாட்டில் 1.97 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் அதில் 1.12 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டார்கள் எனவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...