வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

உலகம் முழுவதும் 680 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 680 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

News image
உலகம் முழுவதும் 680 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
Updated On :25 அக்டோபர் 2021, 9:10 am

DIN

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 680 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுக்க இதுவரை  கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24.40 கோடியாக உயர்ந்துள்ளது. பல்வேறு தொற்று கட்டுப்பாடு நெறிமுறைகள் மற்றும் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின்பும் இதன் தீவிரம் குறையவில்லை.

உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 4.56 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 7.37 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.4 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.5 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்று(அக்-24) நிலவரப்படி 680 கோடி கரோனா தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 288 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்கள் என்றும் தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 77.40 லட்சம் பேருக்கு சுகாதாரத்துறை பணியாளர்கள் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளனர் . 

அதிக அளவு தடுப்பூசி செலுத்திய நாடுகள் :

சீனா - 224.9 கோடி

இந்தியா - 101.19 கோடி

ஐரோப்பா ஒன்றியம் - 69 கோடி

அமெரிக்கா - 48.6 கோடி 

பிரேசில் - 24.07 கோடி 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.