பாகிஸ்தானில் ஷியா- சன்னி பிரிவினர் மோதல்: 11 பேர் பலி , 15 பேர் காயம்
பாகிஸ்தானின் குர்ரம் மாவட்டத்தில் ஷியா மற்றும் சன்னி பிரிவினர்கள் மோதிக் கொண்டதில் 11 பேர் பலியாகியிருக்கிறார்கள்.


பாகிஸ்தானின் குர்ரம் மாவட்டத்தில் ஷியா மற்றும் சன்னி பிரிவினர்கள் மோதிக் கொண்டதில் 11 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
பாகிஸ்தானின் பக்த்துன்வா மாகாணத்தைச் சேர்ந்த குர்ரம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மரத்தை வெட்டுவது தொடர்பாக எழுந்த சண்டையில் அங்கிருந்த ஷியா மற்றும் சன்னி பிரிவு இஸ்லாமியர்களுக்குள் பிரச்னை உருவாகியிருக்கிறது. பின் இருதரபினரும் துப்பாக்கிகளால் தாக்க ஆரம்பித்தனர்.
இதில் சம்பவ இடத்திலேயே இருதரப்பையும் சேர்ந்த 11 பேர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருகிறது.
பாகிஸ்தானில் 20 சதவீதம் மக்கள் தொகை கொண்ட ஷியா இஸ்லாமியர்களை அல்கொய்தா , தாரீக் இ தலிபான் போன்ற அமைப்புகளில் இருக்கும் சன்னி இஸ்லாமியர்கள் தொடர்ந்து தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...