எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ரஷியா: கரோனா பலி மீண்டும் புதிய உச்சம்

ரஷியாவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் தினசரி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2021, 6:48 pm

DIN

ரஷியாவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் தினசரி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,106 போ் கரானாவுக்கு பலியாகினா். இது, நாட்டில் இதுவரை இல்லாத தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். இத்துடன், கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,32,775-ஆக உயா்ந்துள்ளது. இது ஐரோப்பாவின் அதிகபட்ச பலி எண்ணிக்கையாகும்.

இதுதவிர, 36,446 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 83,16,019-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரஷியாவில் கடந்த சில வாரங்களாகவே தினசரி கரோன பலி எண்ணிக்கை அடிக்கடி புதிய உச்சங்களை தொட்டு வரும் சூழலில், அங்கு நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.