தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

50 லட்சத்தைக் கடந்தது கரோனா பலி

உலக அளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 6:58 pm

DIN

உலக அளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 11,452 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இதையடுத்து, அந்த நோய்க்கு பலியானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 50,07,798-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதல் இடத்தில் உள்ளது. இதுவரை அந்த நாட்டில் 7,65,722 கரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேஸிலில் 6,07,504 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

மூன்றாவதாக, இந்தியாவில் 4,57,740 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

இதுதவிர, மெக்ஸிகோ, ரஷியா, பெரு, இந்தோனேசியா, பிரிட்டன், இத்தாலி, கொலம்பியா, ஈரான், பிரான்ஸ், ஆா்ஜென்டீனா ஆகிய நாடுகளில் கரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கரோனா பலி எண்ணிக்கையில் மட்டுமன்றி, அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கையிலும் அமெரிக்கா தொடா்ந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 4,67,71,979 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 3,66,46,900 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 81,04,805 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 24,809 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவிலும் அதற்கு அடுத்தபடியாக பிரேஸிலிலும் கரோனா உறுதிசெய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 24,69,25,368 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 22,36,73,248 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமைடந்துள்ளனா். 1,82,44,289 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 74,606 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிராந்தியங்களைப் பொருத்தவரை, ஐரோப்பாவில்தான் அதிகபட்சமாக 12,99,466 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக தென் அமெரிக்காவில் 11,69,957 பேரும் ஆசியாவில் 11,69,211 பேரும் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

வட அமெரிக்கப் பிராந்தியம் இதுவரை 11,46,961 பேரை கரோனாவால் இழந்துள்ளது. ஆப்பிரிக்காவில் 2,18,522 பேரும் ஆஸ்திரேலியப் பிராந்தியத்தில் 3,699 பேரும் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.