நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேபாளம் நாட்டின் பார்பட் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த சிலர் சிக்கிக்கொண்டதை அடுத்து அவர்களை மீட்கும் பணியில் இருக்கும் மீட்புப்படையினர் இதுவரை 6 சடலங்களை மீட்டு இருக்கிறார்கள்.
இதையும் படிக்க | ஒரே நேரத்தில் 2 தவணை கோவிஷீல்டு செலுத்தப்பட்ட மங்களூரு இளைஞர்
இதுகுறித்து காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட தகவலில் , ' திடீரென ஏற்பட்ட கனமழையால் நிலச்சரிவு உண்டாகி சிலர் உள்ளே புதைந்தனர் . தற்போது வரை 6 பேர் பலியாகியிருக்கிறார்கள். இருவர் மாயமாகி இருக்கிறார்கள்' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பருவக்காற்று ஆரம்பமானதைத் தொடர்ந்து இமைய மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த கனமழை பொழிவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


