ஆப்கன் புதிய அரசு: தலிபான்கள் மீண்டும் ஒத்திவைப்பு
ஆப்கானிஸ்தானில் தங்களது தலைமையிலான புதிய அரசை அமைப்பதை தலிபான்கள் இரண்டாவது முறையாக ஒத்திவைத்துள்ளனர்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
ஆப்கானிஸ்தானில் தங்களது தலைமையிலான புதிய அரசை அமைப்பதை தலிபான்கள் இரண்டாவது முறையாக ஒத்திவைத்துள்ளனர்.
புதிய அரசு குறித்த அறிவிப்பு சனிக்கிழமை வெளியிடப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆப்கன் தலைவர்களின் இணைய முகவரிகளை முடக்கிய கூகுள்
தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் இதுகுறித்து சனிக்கிழமை தெரிவிக்கையில், "புதிய அரசு மற்றும் அமைச்சரவை குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்" என்றார். இதுதவிர அவர் வேறு தகவல்களைப் பகிரவில்லை.
கடந்த ஆகஸ்ட் 15-இல் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து புதிய அரசு அமைப்பதை தலிபான்கள் இரண்டாவது முறையாக ஒத்திவைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...