முந்தைய ஆப்கன் அரசு அதிகாரிகளின் இணைய முகவரிகளை தலிபான்கள் கைப்பற்ற முயன்றதால் அவற்றை முடக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த மாத இறுதியில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசிற்கு உதவிய ஆப்கன் மக்கள் மற்றும் அதிகாரிகளைக் கண்டுபிடித்து அவர்களை தண்டித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் முந்தைய அரசு அதிகாரிகளின் கோப்புகளைக் கைப்பற்றி வரும் தலிபான்கள் அவற்றின் மூலம் முந்தைய அரசின் தலிபான்களுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொண்டது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் முந்தைய ஆப்கன் அரசின் உயர்மட்ட தலைவர்கள், அதிகாரிகள் இதர ஊழியர்களின் இணைய முகவரிகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
ஆப்கன் அரசின் நிதித்துறை, தொழில்துறை, கல்வி மற்றும் கனிம வளங்கள் குறித்த தகவல்களை திருட தலிபான்கள் முயன்றதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | காதல் மன்னனாக ஜெயிப்பது எப்படி?: நிரூபித்துக் காண்பித்த ரிஷி கபூர்!
இந்நிலையில் ஆப்கன் தலைவர்களின் இணையத்தில் உள்ள தகவல்கள் திருடப்படுவதைத் தவிர்க்க அவற்றை முடக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியார் பெயரில் கோயிலின் ரூ.100 கோடி நிலம்: ஊழலில் பின்னால் இருக்கும் பவர்சென்டர் யார்? - இபிஎஸ் கேள்வி!







