விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

அமெரிக்காவில் இடா புயலில் சிக்கி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் பலி

அமெரிக்காவில் இடா புயல் காரணமாக இதுவரை 65 பேர் பலியாகினர்.

News image

கோப்புப்படம்

Updated On :5 செப்டம்பர் 2021, 11:01 am

அமெரிக்கா வட கிழக்கு மாகாணங்களில் 'இடா' புயல் காரணமாக கனமழை பெய்தது. இதையடுத்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல்வேறு மாகாணங்கள் பாதிக்கப்படைந்தன.

இப்புயலில் சிக்கி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் உள்பட மொத்தம் 65 பேர் உயிரிழந்ததாக நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள் மூடப்பட்டு நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்சியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

தெற்கு மாகாணமான லூசியானாவில் 'இடா' புயல் மற்றும் சூறாவளி காரணமாக தீவிரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாகாணத்தின் வடக்கு பகுதிகள் பெரும் பாதிப்படைந்தன.

முக்கியமாக புரூக்ளின் மற்றும் குயின்ஸ் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தால் முழ்கடிக்கப்பட்டு பலத்த சேதம் அடைந்திருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் நெவார்க், லாகார்டியா மற்றும் ஜேஎஃப்கே  ஆகிய பகுதிகள் அருகே அமைந்துள்ள விமான நிலையங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மன்ஹாட்டன், தி பிராங்க்ஸ் மற்றும் குயின்ஸ் ஆகிய நகரங்களின் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.