உக்ரைன்: 23 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு
உக்ரைனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23 லட்சத்தைக் கடந்துள்ளது


உக்ரைனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 2,197 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,00,504-ஆக உயா்ந்துள்ளது.
இது தவிர, மேலும் 53 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 54,054-ஆக உயா்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
உக்ரைனில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 22,14,606 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 31,844 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 177 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...