
ஆப்கானிஸ்தானில் 5 பத்திரிகையாளர்களை தலிபான்கள் புதன்கிழமை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்பு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான், முந்தைய ஆட்சியின்போது அவர்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை கைது மற்றும் கொலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இடைக்கால அரசின் பிரமரை நேற்று அறிவித்த நிலையில், இன்று பத்திரிகையாளர்கள் 5 பேரை தலிபான்கள் கைது செய்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கனைவிட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.