உலகளவில் 10 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று 'ரியல் மீ ' முதலிடம் 

ஸ்மார்ட்போன் சந்தைகளில் தனக்கென தனி வாடிக்கையாளர்களை அமைத்துக் கொண்ட 'ரியல் மீ' நிறுவனம் நடப்பு ஆண்டில் உலகளவில்  10 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று முதலிடத்தை பிடித்திருக்கிறது. 

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி  ஸ்கை லீ " தொழில்நுட்ப புரட்சியால் கடந்த சில வருடங்களாகவே ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்து வந்த நிலையில் 'ரியல் மீ' நிறுவனம் உலகம் முழுக்க இந்தாண்டின் இரண்டாவது காலாண்டில்  10 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று சாதனை படைத்துள்ளது. அதை சாத்தியமாக்கிய புதிய வாடிக்கையாளர்களுக்கு  நன்றி . அடுத்த ஆண்டும் 10 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பதே 'ரியல் மீ' யின் இலக்கு " எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த விற்பனையின் மூலம் 149 சதவீத வளர்ச்சியை ரியல் மீ அடைந்திருப்பதாக சர்வதேச புள்ளி விவரங்கள் மையம்  தெரிவித்திருக்கிறது .

தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது காலாண்டில் 23 சதவீத பங்குளை வைத்திருப்பதோடு முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.

மேலும் " ரியல் மீ தன்னுடைய இலக்காக எப்போதும் முதலிடத்தை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் அதில் முக்கியமான பங்காற்றி வருகிறார்கள் " என இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com