ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற இந்தியர்களுக்கு வேண்டுகோள் 

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும் இந்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும் இந்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அந்நாட்டிலிருந்து இந்தியர்கள் இன்று (செவ்வாய்கிழமை) வெளியேற இந்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள நான்காவது பெரிய நகரமான மசார்-இ-ஷெரீப்பிலிருந்து கிளம்பும் சிறப்பு விமானம் மூலம் அங்கிருந்து வெளியேற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மசார்-இ-ஷெரீப் நகரில் தீவிரமான தாக்குதல் நடத்திவருவதாக தலிபான்கள் தரப்பில் சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்டது. மசார்-இ-ஷெரீப்பிலிருந்து மேற்கில் உள்ள ஷெபர்கன் பகுதியையும் கிழக்கில் உள்ள தலோகான் பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றியிருந்தனர்.

வடக்கு ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய நகரமான மசார்-இ-ஷெரீப். அரசு படைகளின் கோட்டையாக திகழ்ந்துவந்தது. மே மாதம், அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் மோதல் தீவிரமாக வெடித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com