

ஆப்கானிஸ்தானில் கடந்த 6 நாள்களில் தலிபான் அமைப்பினர் 8 முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுக்கும் இடையேயான மோதல் உச்சம் பெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி தொடர்ந்து தலிபான்கள் முன்னேறி வருகின்றனர்.
இதையும் படிக்க | ஆப்கானிஸ்தான் : பாதுகாப்புப் படை தாக்குதலில் 439 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணங்களைக் கைப்பற்றி வரும் தலிபான்கள் பைசாபாத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன்மூலம் வடக்கு மாகாணங்களில் தங்களது ஆதிக்கத்தை தலிபான்கள் நிறுவியுள்ளனர். தற்போதைய நிலையில் ஆப்கானிஸ்தானின் 65 சதவிகிதம் பகுதிகளை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.
இதையும் படிக்க | நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மோடி ஆலோசனை
கடந்த 6 நாள்களில் மட்டும் 8 முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். சீனா, பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடனான எல்லைப் பகுதிகளை தலிபான்கள் ஏற்கெனவே தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.