தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆப்கனைவிட்டு வெளியேறத் துடிக்கும் மக்கள்: விமானத்தில் தொங்கிச் சென்ற 3 பேர் பலி(விடியோ)

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விமானத்தில் தொங்கியபடி சென்ற இருவர் கீழே விழுந்து பலியாகியுள்ளனர்.

News image
விமானத்தில் தொங்கி சென்ற இருவர் பலி
Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:39 am

DIN

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விமானத்தில் தொங்கியபடி சென்ற 3 பேர் கீழே விழுந்து பலியாகியுள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் நேற்று தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.

இந்நிலையில், ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். மேலும், விமானங்கள் அனைத்திலும் முந்தியடித்து கொண்டு ஏறுவதால் நிலைமை கைமீறியதை அடுத்து, மக்கள் மீது இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் இடம் கிடைக்காததால் வெளிபுறத்தை பலர் தொற்றிக் கொண்டனர். இருப்பினும், தொடர்ந்து விமானம் செலுத்தப்பட்டதால், வானில் பறக்கும்போது கீழே விழுந்து 2 பேர் பலியாகியுள்ளனர். இந்த காணொலி சமூக வளைதளங்களில் பரவி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.