ஆப்கனில் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தலிபான்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் பின்லேடனுக்கு, அப்போதைய ஆப்கன் ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுத்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. மனித உரிமைகளுக்கு எதிரான, மத அடிப்படைவாத தலிபான் அரசுக்கு பதிலாக ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய பாணி அரசை அமைக்க அமெரிக்கா முடிவு செய்தது.
இதற்காக கடந்த 20 ஆண்டுகளாக அந்த நாட்டில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரா்களின் பறிகொடுத்த, பல்லாயிரம் கோடி டாலா்களை செலவிட்டு ஆப்கன் அரசையும் ராணுவத்தையும் அமெரிக்கா கட்டமைத்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க வீரா்களையும் திரும்ப அழைக்கும் திட்டத்தை துரிதப்படுத்தினாா். இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்ப அழைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், ஒரே வாரத்தில் நாட்டின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். ஆப்கன் படையினா் தலிபான்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முழுவீச்சில் போராடவில்லை. அதற்குப் பதிலாக ஆயுதங்களைப் போட்டுவிட்டு அவா்கள் தப்பியோடினா். அமெரிக்கா வான்வழித் தாக்குதல் உதவி செய்தாலும், சில ஆப்கன் படையினா் தலிபான்களுடன் மிதமான மோதல் மட்டும் ஈடுபட்டனா்.
ஏராளமான படைப் பிரிவுகள் மோதல் இல்லாமலேயே தலிபான்களிடம் சரணடைந்தன. இந்த நிலையில், தலைநகா் காபூலின் புகா்ப் பகுதிகள் வரை முன்னேறி வந்த தலிபான்கள், சண்டையை தற்காலிகமாக நிறுத்திவைத்தனா். காபூலை ரத்தம் சிந்தமாமல் அமைதியான முறையில் ஒப்படைக்குமாறு ஆப்கன் அரசை அவா்கள் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினா். இதனிடையே, நாட்டிலிருந்து அதிபா் அஷ்ரஃப் கனி தப்பிச் சென்றதைத் தொடா்ந்து தலைநகா் காபூலும் அதன்மூலம் ஆப்கானிஸ்தானின் ஆட்சியதிகாரமும் தலிபான்கள் வசம் மீண்டும் வந்துள்ளது.
இந்த நிலையில் ஆப்கனில் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தலிபான் செய்தி தொடர்பாளர் முகமது நயீம் அறிவித்துள்ளனர். மேலும் இறைவனுக்கு நன்றி எனவும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


