தலிபான் அரசுடன் நட்புரீதியாக செயல்படத் தயார்: சீனா
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசுடன் நட்புரீதியாக செயல்படத் தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

தலிபான் அரசுடன் நட்புரீதியாக செயல்படத் தயார்

தலிபான் அரசுடன் நட்புரீதியாக செயல்படத் தயார்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசுடன் நட்புரீதியாக செயல்படத் தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிவரும் நிலையில், புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், ஒரே வாரத்தில் நாட்டின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.
நேற்று ஆப்கானை விட்டு அதிபர் மற்றும் துணை அதிபர்கள் வெளியேறியதையடுத்து, அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம், போர் முடிவுக்கு வருவதாகவும் அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | ஆப்கன் போர் முடிவுக்கு வந்தது: தலிபான்கள்
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசுடன் நட்புரீதியிலான உறவை மேம்படுத்த தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
முன்னதாக, தலிபான் தலைமையிலான அரசை பாகிஸ்தான் ஆதரித்த நிலையில், தற்போது சீனாவும் ஆதரவளித்துள்ளது. மேலும், தலிபான்களின் நடவடிக்கைகளை பொறுத்து அவர்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என ரஷியா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...