ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3,200 அமெரிக்கர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள், ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். மேலும் தலிபான்கள், அங்கு ஆட்சியமைப்பதற்கான பல்வேறு பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் தூதரங்களை காலி செய்த பல்வேறு நாடுகள் தங்களுடைய நாட்டினரை மீட்கும் பணியில்ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3,200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதில், நேற்று மட்டும் 13 விமானங்களில் 1,100 பேர் காபூலில் இருந்து அமெரிக்கா அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்த விமானங்களில் 12 சி-17 விமானங்கள், ஒரு சி -130 விமானம் ஆகும்.
இதனிடையே இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

