பெற்றோர் இல்லாமல் சிறுமி மேற்கத்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டாரா?: பிரிட்டன் விளக்கம்

ஆப்கானிஸ்தானில் பெற்றோர் இல்லாத குழந்தைகளை மீட்கவில்லை என பிரிட்டன் விளக்கம் அளித்துள்ளது.
குழந்தை மீட்கப்படும் காட்சி
குழந்தை மீட்கப்படும் காட்சி

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் மேற்கத்திய ராணுவ வீரர்களிடம் பெற்றோர் இன்றி சிறுமி மட்டும் ஒப்படைக்கப்படுவது போன்ற விடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ், பெற்றோர் இல்லாத குழந்தைகளை மீட்கவில்லை என தெரிவித்துள்ளார்.

காபூல் விமான நிலையத்தில் சுவருக்கு அப்பால் உள்ள மேற்கத்திய ராணுவ வீரர்களிடம் குழந்தை ஒன்று ஒப்படைக்கப்படுவது போன்ற காட்சிகள் விடியோவில் பதவியாகியுள்ளது.

இதுகுறித்து வாலஸ் மேலும் கூறுகையில், "பெற்றோர் மீட்கப்பட்ட பிறகே சுவருக்கு அப்பால் உள்ள ராணுவ வீரர்களிடம் குழந்தை கொடுக்கப்பட்டது. பெற்றோர் இன்றி வயது வராதோரை அழைத்து செல்ல முடியாது. மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறோம். அதை எப்படி சமாளிக்கலாம் என்பது குறித்து ஆராய்ந்துவருகிறோம். 

நாட்டை விட்டு வெளியேற பல ஆப்கன் மக்கள் முயன்றுவருகின்றனர். எனவே, விமான நிலையத்தில் உள்ள பிரிட்டன் ராணுவ வீரர்கள் கடினமான சூழலை சந்தித்துவருகிறோம்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com