‘அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஆப்கன் அரசு’

ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசை அமைப்பதற்கு அண்டை நாடுகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஈரான் அதிபா் இப்ராஹிம் ரயிசி வலியுறுத்தியுள்ளாா்.

ஈரான் வந்திருந்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷியிடம் இதுகுறித்து அவா் கூறுகையில், ஆப்கானிஸ்தானின் அனைத்துப் பிரிவு மக்களும் ஒருங்கிணைந்த, பரந்த தன்மையுடைய அரசு அமைய வேண்டும். அதற்கு அண்டை நாடுகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

கடந்த 1998-ஆம் ஆண்டில் தங்களது தூதரக அதிகாரிகளை தலிபான்கள் படுகொலை செய்ததையடுத்து, அந்த அமைப்பினருக்கு எதிரான வடக்குக் கூட்டணிப் படைக்கு ஈரான் ஆதரவு அளித்தது. ஆனால், தற்போது தலிபான்கள் மாறிவிட்டதாக ஈரான் கூறி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com