ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், மல்லிகார்ஜுன கார்கே மரியாதை! பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு
/

அமெரிக்க அதிபராக புதிய வரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்!

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்கா அதிபராக 1.25 மணி நேரம் பதிவி வகித்து புதிய சாதனை படைத்தார்.

News image

கமலா ஹாரிஸ்

Updated On :20 நவம்பர் 2021, 11:53 am IST


வாஷிங்டன்: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக 1.25 மணி நேரம் பதிவி வகித்து புதிய சாதனை படைத்தார்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற  பின்னர் முதன்முறையாக தனது வழக்கமான உடல் பரிசோதனைக்காக வாஷிங்டன் புறநகரில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு தற்காலிக அதிபருக்கான அதிகாரம் வழங்கப்பட்டதாக வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது. 

இதனைத்தொடர்ந்து அமெரிக்க துணை அதிபரான ஹாரிஸ் 1.25 மணி நேரம் அமெரிக்க அதிபராக இருந்து அதிபரின் பணிகளை கவனித்தார். 

பின்னர், சுமார் 11:35 மணியளவில் ஹாரிஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ரான் க்ளெய்னுடன் பேசிய பிறகு பைடன் தனது கடமைகளை மீண்டும் தொடங்கினார் என்று செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறினார். 

அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற முதல் பெண் கமலா ஹாரிஸ், அமெரிக்காவில் பெண் அதிபராக பதிவிவகித்த முதல் பெண் என்ற புதிய வரலாறும் படைத்தார். 

அமெரிக்க அதிபராக பெண் பதவி வகித்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், 2002 மற்றும் 2007 இல் இதே நடைமுறையைப் பின்பற்றியது  குறிப்பிடத்தக்கது. 

பைடன், 2019 டிசம்பரில் தனது கடைசி முழுப் பரிசோதனையை மேற்கொண்டார், அப்போது மருத்துவர் ஒருவர், பைடன் "ஆரோக்கியமானவர், மற்றும்  அதிபரின் கடமைகளை வெற்றிகரமாகச் செய்யத் தகுதியானவர்" என்று தனது மருத்துவ அறிக்கை தெரிவித்திருந்தார். அதிபராக பணியாற்றும் மிக வயதான நபர் பைடன்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.