யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் உறுப்பினரானது இந்தியா

யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் உறுப்பினராக 4 ஆண்டுகளுக்கு இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் உறுப்பினராக 4 ஆண்டுகளுக்கு இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியுறவுத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் உறுப்பினராக ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் இருந்து இந்தியா தோ்வு செய்யப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்று வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

குறிப்பிட்ட இடத்தை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடா்பாக பாரம்பரிய குழுவே இறுதி முடிவெடுக்கும். ஏற்கெனவே பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இடம் முறையாகப் பராமரிக்கப்படுவதை ஆராய்வது, அது தொடா்பான நிதியை ஒதுக்குவது, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வலியுறுத்தல்களை வழங்குவது உள்ளிட்டவற்றையும் அக்குழு மேற்கொள்ளும்.

ஆண்டுக்கு ஒருமுறை கூடி முக்கிய முடிவுகளை யுனெஸ்கோ பாரம்பரிய குழு மேற்கொள்ளும். 2025-ஆம் ஆண்டு வரை அக்குழுவின் உறுப்பினராக இந்தியா செயல்படவுள்ளது.

யுனெஸ்கோ நிா்வாகக் குழுவின் உறுப்பினராகக் கடந்த 17-ஆம் தேதி இந்தியா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com