ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 20 பேர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதில், 20 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :7 அக்டோபர் 2021, 5:15 am

DIN


குவெட்டா (பாகிஸ்தான்): பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதில், 20 பேர் உயிரிழந்தனர்; 200க்கும்  போ் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.0-ஆக பதிவானதாகவும், நிலநடுக்கத்தின் மையம் ஹர்னாய் அருகே 20 கி.மீ. (12 மைல்) தொலைவில் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லையான பலுசிஸ்தான் முழுவதும் உள்ள நகரங்களில் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக, நகரத்தின் புறநகரில் உள்ள சுரங்கத்தில் சுமார் 15 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்காக மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். 

நிலநடுக்கம் ஏற்பட்ட ஹர்னாய் பகுதி மலைப்பகுதி என்பதால், அங்கு நடைபாதை சாலைகள், மின்சாரம் இல்லாததாலும் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த 20 பேரில் ஒரு பெண், ஆறு குழந்தைகள் என்றும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஹர்னாயில் உள்ள மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

"காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கைகால்கள் முறிந்த நிலையில் உள்ளனர். குறைந்தது 40 பேர் மோசமான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்".

2015 இல், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர்.

2005 இல், ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீரில், 73 ஆயிரத்துக்கம் அதிகமான மக்கள் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 3.5 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.

1935 இல் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பிரிட்டிஷ் ஆளும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த குவெட்டாவில் சுமார் 30,000 பேர் இறந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.