ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை ஈட்டிய கூகுளின் தாய் நிறுவனம்

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் லாபம் 18.9 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒழுங்குமுறை விதிகள் காரணமாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் பல கட்டுப்பாடுகளுக்கு உள்ளானது. இதன் காரணமாக அந்நிறுவனம் பெரும் அழுத்தத்தை சந்திக்க நேரிட்டது. ஊரடங்கு காரணமாக பணி முறை பெரும் மாற்றத்திற்கு உள்ளானது. இந்த சவால்களுக்கு மத்தியில், ஆல்பாபெட் நிறுவனம் 1424 கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை ஈட்டியுள்ளது.

தேடல் இயந்திரம், விளம்பர சந்தை பகுதி, உலகளவில் ஆதிக்கத்தை செலுத்தும் யூடியூப் என இணைய செயல்பாடுகளின் மையப்புள்ளியாக கூகுள் திகழ்ந்துள்ளது. சமீபத்தில் முடிந்த காலாண்டில், 65.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக அந்நிறுவனம் ஈட்டியுள்ளது. இது, கடைசி ஆண்டில் இதே காலாண்டில் ஈட்டிய வருமானத்தை விட 41 சதவிகிதம் அதிகமாகும்.

கூகுளின் இணைய விளம்பர இயந்திரம் மற்றும் இதர பிற சேவைகள் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக டெக் டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், வாடிக்கையாளர்களின் முக்கிய தகவல்களை வெளியிட்டதாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட போதிலும், அது பெரிய லாபத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், மைக்ரோசாப்ட் நிறுவனமும் லாபத்தை ஈட்டியுள்ளது.

ஆனால், அதற்கு நேர்மாறாக ட்விட்டர் நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் பங்குதாரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது இழப்புக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. லாபம் ஈட்டியிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள கூகுளின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை, "எங்களின் (செயற்கை நுண்ணறிவு) முதலீடுகள் மக்களுக்கும் எங்கள் கூட்டாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள தயாரிப்புகளை உருவாக்க எப்படி உதவுகின்றன என்பதை இந்த காலாண்டின் முடிவுகள் எடுத்துரைக்கின்றன.

டிஜிட்டல் மாற்றம், வீட்டிலிருந்து பணி செய்யும் முறையும் அலுவலக பணி முறையும் தொடர்வதால், எங்கள் கிளவுட் சேவைகள் நிறுவனங்களை ஒத்துழைக்க உதவுகின்றன" என்றார். ஆல்பாபெட் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜூலை முதல் செப்டம்பர் வரையில், அதன் விடியோ சேவை மூலம் விளம்பரதாரர்களின் 7.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இலக்கு விற்கப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில், கடைசி ஆண்டில், 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இலக்கு விற்கப்பட்டது.

ஆல்பாபெட்டின் தொலைதூர கணினியை மையப்படுத்திய வணிகம் மூலம் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயாக வந்துள்ளன. அது கடைசி ஆண்டை விட 45 சதவிகிதம் அதிகமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com