பாகிஸ்தானுக்கு ரூ.22.5 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கும் செளதி அரேபியா

பொருளாதார உதவியாக பாகிஸ்தான் அரசுக்கு இந்திய மதிப்பில் ரூ.22.5 ஆயிரம் கோடி நிதியுதவி அளிப்பதாக செளதி அரேபியா அறிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சர்வதேச நாணயவியல் கழகம் இடையே 600 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் அதனைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தம் தொடர்பாக எத்தகைய பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் சர்வதேச நாணயவியல் கழக ஒப்பந்தத்தின்படி செளதி அரேபிய அரசு பாகிஸ்தான் அரசுக்கு 300 கோடி அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 

இந்த நிதியானது பாகிஸ்தான் மத்திய வங்கியில் வரவு வைக்கப்படும் எனவும், கூடுதலாக 102 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பெட்ரோலிய வணிகத்திற்கு கடனுதவி அளிக்கப்படும் எனவும் செளதி அரேபியா தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு செளதி அரேபியா ஏற்கெனவே 300 கோடி அமெரிக்க டாலர்கள் நிதியுதவியும், அந்நிய செலாவணி கையிருப்புக்கு 300 கோடி அமெரிக்க டாலர்களையும் வழங்கியிருந்தது. அப்போதைய சூழலில் இருதரப்பு உறவிலும் விரிசல் ஏற்பட்டதால் பாகிஸ்தான் 200 கோடி அமெரிக்க டாலர்களை திருப்பியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com