தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச்சூடு: காவல்துறை அதிகாரிகள் 4 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் ஆப்கன் எல்லையில் அடையாளர் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் அதிகாரிகள் 4 பேர் பலியாகினர்.

News image
பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச்சூடு: காவல்துறை அதிகாரிகள் 4 பேர் பலி
Updated On :27 அக்டோபர் 2021, 1:14 pm

DIN

பாகிஸ்தான் நாட்டின் ஆப்கன் எல்லையில் அடையாளர் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் அதிகாரிகள் 4 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ளது கைபர் பக்துன்க்வா. ஆப்கன் எல்லைப் பகுதியில் உள்ள இந்தப் பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பகுதியில் காவல் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல் அதிகாரிகள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 4 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.