பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நைஜீரியா : சிறையைத் தகர்த்து 240 கைதிகள் தப்பியோட்டம்

நைஜீரியாவின் கோகி மாகாணத்தில் இருக்கும் கெப்பா சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(செப்-12) இரவு அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்த 240 கைதிகளை தப்பவைத்திருக்கிறார்கள்.

News image

நைஜீரியா : சிறையைத் தகர்த்து 240 கைதிகள் தப்பியோட்டம்

Updated On :14 செப்டம்பர் 2021, 7:15 am

நைஜீரியாவின் கோகி மாகாணத்தில் இருக்கும் கெப்பா சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(செப்-12) இரவு அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்த 240 கைதிகளை தப்பவைத்திருக்கிறார்கள்.

இரவில் கெப்பா சிறைச்சாலையின் தடுப்புச் சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்தும் துப்பாக்கி சூடு நடத்தியும் 240 கைதிகளை தப்பவைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ராஃப் அரெக்பசுலோ ,’ தப்பி ஓடிய குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களை ’இண்டெர்பொல்’ அமைப்பிடம் சமர்ப்பித்திருக்கிறோம் . ஒருவேளை நாட்டைவிட்டு அவர்கள் வெளியேறினாலும் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. கெப்பா சிறைச்சாலையில் இருந்த 294 கைதிகளில் 224 பேர் விசாரணைக் கைதிகளும் 70  குற்றவாளிகளும் இருந்தனர்’ எனத் தெரிவித்ததோடு இத்தாக்குதலில் ஈடுபட்டு பெரிய சேதாரத்தை ஏற்படுத்தி இரண்டு காவலாளிகளையும்  கொன்ற தீவிரவாதிகளை உடனடியாக கைது செய்வோம் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அடையாள்ம் தெரியாத தீவிரவாதிகள் இமொ மாகாணத்தில் இருக்கும் சிறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி 1,800 கைதிகளை தப்ப வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.