எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உலக கரோனா பாதிப்பு 23 கோடியைக் கடந்தது 

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23.08 கோடியைக் கடந்தது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 4:00 am

DIN

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23.08 கோடியைக் கடந்தது.

இதுகுறித்து ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

சா்வதேச அளவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,08,81,354 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 47 லட்சத்து 32 ஆயிரத்து 838 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 20,55,43,268 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,84,69,275 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 97,508 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 4,34,04,877 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 6,99,748 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 3,29,47,854 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 97,57,275    போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 3,35,62,034 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 4,46,080 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

உலக அளவில் 3-ஆவதாக பிரேஸிலில் 2,12,83,567 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலிகளைப் பொறுத்தவரை இதுவரை 5,92,357 போ் அந்த நோய்க்கு பலியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதுதவிர, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன், துருக்கி, ஆா்ஜென்டீனா, கொலம்பியா, ஸ்பெயின், இத்தாலி, ஈரான், ஜொ்மனி, இந்தோனேசியா, போலந்து உள்ளிட்ட 35 நாடுகளில் தலா 10 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், உலகம் முழுவதும் தொற்று பாதிப்போர் மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.