அமெரிக்காவுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஸை முதல்முறையாக வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். வியூக ரீதியான இருநாட்டு உறவின் முக்கியத்துவம் குறித்தும் பரஸ்பர நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்தும் இருவரும் உரையாடினர்.
பின்னர், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மோடி, "இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான கூட்டு நாடுகள். ஒரே மாதிரியான விழுமியங்களையும் புவிசார் அரசியல் நலன்களையும் கொண்டுள்ளோம்" என்றார்.
அமெரிக்காவும் இந்தியாவும் உலகின் பெரிய மற்றும் பழமையான ஜனநாயக நாடுகள் என்பதை மேற்கோள் காட்டிய மோடி, இரு நாடுகளும் ஒரே மாதிரியான விழுமியங்களை பகிர்ந்து கொள்வதால் அமெரிக்கா, இந்திய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து அதிகரித்துவருவதாக குறிப்பிட்டார்.
கமலா ஹாரிஸை இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்த மோடி, "அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் இருநாட்டு உறவு புதிய உச்சத்தை தொடும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. உலகின் வாழும் பல மக்களுக்கு ஹாரிஸ் உத்வேகம் அளிக்கிறார்" என புகழாரம் சூட்டினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "உலகம் கடும் சவால்களை சந்தித்த சமயத்தில், பைடனும், கமலாவும் அதிபராகவும் துணை அதிபராகவும் பதவியேற்று கொண்டனர். குறுகிய காலத்தில் கரோனா, பருவநிலை மாற்றம், குவாட் போன்றவற்றில் இருவரும் சாதனை படைத்திருக்கிறார்கள்.
இதையும் படிக்க | இன்னும் எத்தனை காலம்தான் முகக்கவசம் அணிவது?
துணை அதிபராக கமலா பொறுப்பேற்ற பிறகு அவரிடம் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கடுமையான கரோனா அலைக்கு எதிராக இந்தியா போரிட்ட சமயத்தில் நாங்கள் இருவரும் பேசினோம். அச்சமயத்தில், எங்களுக்கு ஆதரவு அளித்து அன்பாக நடந்து கொண்டதை நினைவு கூற விரும்புகிறேன்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

முதல் தேசியக் கொடியை உருவாக்கிய குடியாத்தத்தில் 100 அடி உயர கம்பம்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் ஸ்ரீசுவா்ண லட்சுமி கோயில் ஆண்டு விழா

அடமானம் வைத்த நகையை ஆள்மாறாட்டம் செய்து மீட்டு மோசடி: 2 பெண்கள் கைது

சாதாரண தொண்டன் கூட முதல்வா் ஆகலாம் என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியம்: முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

