தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இலங்கை ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி?

இலங்கை லங்கா சுதந்திர கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள், இலங்கை ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகுவது என்று ஒருமனதாக முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
இலங்கை ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி?
Updated On :2 ஏப்ரல் 2022, 7:30 am

DIN


இலங்கை லங்கா சுதந்திர கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள், இலங்கை ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகுவது என்று ஒருமனதாக முடிவெடுத்திருப்பதாகவும், காபந்து அரசு அமைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் தலைமையகத்தில், நேற்று மாலை கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் முன்னாள் அதிபர் மைத்ரிபால ஸ்ரீசேனா தலைமையில் ஆலோசனை நடத்தினர்.

இலங்கையின் ஆட்சிப் பொறுப்பிலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விலகுவது குறித்து ஸ்ரீசேனா இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், காபந்து அரசை உருவாக்குமாறு விரிவான கடிதம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து பேசிய அமைச்சர் தயாசிரி ஜெயசேகரா, இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அதிபர் முழுமையான ஒத்துழைப்பை அளிக்கவில்லை. இருந்தபோதிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபட்சவை விலகுமாறு வற்புறுத்துவார்கள் என்று குறிப்பிட்டார்.

இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளும், இலங்கை மத்திய அமைச்சரவையைக் கலைத்துவிட்டு, காபந்து அரசை ஏற்படுத்தி, நாட்டில் தற்போத நிலவும் பொருளாதார பற்றாக்குறையை சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.