இதுகுறித்து உக்ரைன் அரசு வழக்குரைஞர் இரினா வெனெடிக்டோவா கூறுகையில், தலைநகா் கீவ் அருகே உள்ள புச்சா, இர்பின் மற்றும் ஹோஸ்டோமல் நகரங்களிலிருந்து ரஷியப் படையினா் வெளியேறியதும் அந்த நகருக்குள் நாங்கள் நுழைந்ததும் அதிர்ச்சிகள் காத்திருந்தது. அங்கு புதைகுழியில் அரைகுறையாகப் புதைக்கப்பட்டவாறும், சில சடலங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையிலும், துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டவாறு சாலைகளில் கிடந்த 410 உடல்களை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். மேலும், சிலா் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளும் தென்படுவதாக கூறினார். இதுவரை 140 உடல்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன, ஆனால் கீவ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு முடிந்தவரை தடயவியல் நிபுணர்களை வழங்குமாறு சுகாதார அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.